profession

திறத்தொழில், நுண்ணறிவுத் தொழில், விழைதேர் தொழில், வாழ்க்கைத்தொழில், தொழிலர் தொகுதி, வெளிப்படை அறிவிப்பு, சமய நம்பிக்கை, வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை

தமிழ் விளக்கம்

தங்களுடைய விசேஷ அறிவு, பொதுவான நம்பிக்கைகள், திறமைகள், செயல்முறைகள், மதிப்பீடுகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தேவையை பூர்த்தி செய்யும் பணியைத் திறத்தொழில் எனலாம். இந்த திறத் தொழிலினரால் மட்டுமே தங்களின் விசேஷித்த தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும் என்று மக்களும் உணர்வதால், அந்தக் குறிப்பிட்ட தேவையை அவர்கள் மட்டுமே பூர்த்தி செய்யும் சட்ட அங்கீகாரத்தையோ, உரிமையையோ அல்லது பிற இசைவானைகளையோ, ஒப்புதலையோ அளிக்கிறார்கள். அந்த மாதிரி ஒப்புதல் பெற்ற திறத் தொழிலினர் தங்களுடைய அறிவை விசாலமாக்கியும் கூர்மைப்படுத்தியும், தங்களுடைய திறன்களை மேம்படுத்தியும், தங்களின் செயல்பாட்டிற்கான தரத்தையும், நெறிமுறைகளை நிர்ணயித்துக்கொண்டும், அத்தொழிலில் ஈடுபடும் பிறரும் அதைப்பின்பற்றறும் சூழ்நிலையை உருவாக்கியும், தங்களுடைய செயல்பாடுகளை வெளிப்படையாக வைத்துக்கொண்டு, குறிக்கோள்களை அடைய முயலுவதால் மக்களிடம் / சமூகத்திடம் அத்தொழிலின் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்திக்கொள்கின்றனர்.

English

A group of people who use in common a system of values, skills, techniques, knowledge, and beliefs to meet a specific social need. The public comes to identify this group as being suited to fulfill the specific need and often gives it formal and legal recognition through licensing or other sanctions as the legitimate source for providing the relevant service. The group enhances its public credibility by expanding its body of knowledge, making the knowledge accessible to its members, refining its skills and values, ensuring that its members comply with its established standards, and making public the actions it takes to reach these goals.