professional

சிறப்புத் திறலினர், விழை தொழிலினர், திறத் தொழிலினர், தொழில் வல்லுநர், தொழில் நெறிஞர், துறைசார் வல்லுனர்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட திறத்தொழிலில், நுண்ணறிவுத் தொழிலில் அதற்குண்டான அறிவையும் திறனையும் பெற்று, அதில் உறுப்பினராகி, அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தொழில் வரையறுத்த நெறிகளைப் பின்பற்றி சேவை செய்பவரைச் சிறப்புத் திறலினர், விழை தொழிலினர், திறத் தொழிலினர், தொழில் வல்லுநர், தொழில் நெறிஞர், துறைசார் வல்லுனர் என்று கூறலாம்.

English

An individual who qualifies for membership in a specific profession and uses its practices, knowledge, and skills to provide services to client systems, and in so doing, always adheres to its values and code of ethics.