professional association
திறத்தொழிலினர் சங்கம்
தமிழ் விளக்கம்
ஒரே திறத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட, தேசம் தழுவிய, ஒரு தேசியத் தலைமையகத்தைக் கொண்டு, பல்வேறு கிளைகளுடன் செயல்படும் அமைப்பு. அத்தொழிலில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து எடுத்துரைக்கவும், அத் தொழில் சார்ந்த பிரச்சனைகளை மக்களுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தவும், உறுப்பினர்களின் பணிச்சூழலை மேம்படுத்தவும், அத் தொழிலின் மரபார்ந்த வாடிக்கையாளர்களின் நலனிற்காகப் பாடுபடவும், அத் தொழில் சமந்தப்பட்ட ஒழுக்க நெறிகளையும் கட்டுப்பாடுகளையும், அத்தொழில் எந்தத் தரத்துடன் எப்படிச் செய்யப்படவேண்டுமென்று பிரதிபலிக்கும் சட்டவிதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் முயல்வது இந்த அமைப்புகளின் நோக்கமாகும் அமெரிக்க மருத்துவ சங்கம் (American Medical Association - AMA) அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கம் (American Bar Association (ABA) மற்றும் தேசிய கல்விக் கழகம் (National Education Association (NEA), ஆகியவை அமெரிக்க எடுத்துக்காட்டுகள் மட்டுமல்ல, இதே மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் தொழில்சார் அமைப்புகள் செயல்படுகின்றன. சமூகப் பணியைப் பொருத்தமட்டில் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் (National Association of Social Workers (NASW), தேசிய கறுப்பின சமூகப்பணியாளர் சங்கம் (National Association of Black Social Workers (NABSW) பிணிசார்ந்த சமூகப்பணியாளர் கூட்டமைப்பு (Clinical Social Work Federation (CSWF), சர்வதேச சமூகப்பணியாளர் கூட்டமைப்பு (International Federation of Social Workers (IFSW) போன்ற அமைப்புக்கள் சில எடுத்துக்காட்டுகளாகும்.
English
A membership organization of qualified individuals from the same profession that represent the profession throughout the nation, with national headquarters and local chapters, whose purposes are to maintain ethical standards, to educate the members about advances in their fields, to educate the public and the membership about issues of concern to the profession, to advocate for members' better working conditions and for the well-being of their traditional clientele, and to help legal bodies establish and maintain laws regulating the profession's type of practice. Examples include the American Medical Association (AMA), the American Bar Association (ABA), and the National Education Association (NEA). Social work professional associations include the National Association of Social Workers (NASW), the National Association of Black Social Workers (NABSW), the Clinical Social Work Federation (CSWF), the Canadian Social Workers Association (CSWA), the British Association of Social Workers (BASW), and the International Federation of Social Workers (IFSW).