professional certification

திறத் தொழிலினரென்று சான்றளித்தல், விழை தொழிலினரென்று சான்றளித்தல். தொழில் வல்லுனரென்று சான்றளித்தல், துறைசார் வல்லுனரென்று சான்றழளித்தல்

தமிழ் விளக்கம்

ஒரு திறத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலோனவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு திறத்தொழில் சங்கம், அத்தொழிலுக்குறிய விசேஷித்த அறிவையும், அனுபவத்தையும், திறனையும் ஒரு உறுப்பினர் பெற்றிருப்பதாக பொதுமக்களுக்கு / சமூகத்திற்கு அளிக்கும் உத்தரவாதமே சான்றளித்தல் எனப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் சமூகப்பணியில் ஐந்து விதமான சான்றளிப்புகளைச் செய்கிறது. 1. இளங்கலை சமூகப்பணியாளருக்கான கல்விக்கழக சான்றளிப்பு (The Academy of Certified Baccalaureate Social Workers (ACBSW), 2. சமூகப்பணியாளர்களுக்கான கல்விக்கழக சான்றளிப்பு (The Academy of Certified Social Workers (ACSW), 3. பள்ளி சமூகப்பணியில் தொழில்திறனுடையவர் என்ற சான்றளிப்பு (The School Social Work Specialist (SSWS), 4. பிணி சார்ந்த சமூகப்பணித் திறன் சான்றளிப்பு (The Qualified Clinical Social Worker), 5. பிணி சார்ந்த சமூகப்பணியில் பட்டயச் சான்றிதழ் (The Diplomate in Clinical Social Work (DCSW). போன்றவை பல்வேறு சான்றளிப்பு வகைகளாகும்.

English

The public assurance by a recognized professional association, consisting of a significant part of a profession's membership, that a member of that profession has attained a specified level of knowledge, experience, and skill. The National Association of Social Workers (NASW) offers five professional certificates: (1) The Academy of Certified Baccalaureate Social Workers (ACBSW), (2) the Academy of Certified Social Workers (ACSW), (3) the School Social Work Specialist (SSWS) credential, (4) the Qualified Clinical Social Worker (QCSW), and (5) the Diplomate in Clinical Social Work (DCSW).