professional conduct

திறத்தொழில்சார் நடத்தை / ஒழுகலாறு

தமிழ் விளக்கம்

ஒரு தொழில் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகள். பெரும்பாலான திறத்தொழில்கள், தொழில்சார் நடத்தை நெறிமுறைகளை நிர்ணயித்தும், அது பின்பற்றப்பட வேண்டிய முறைகளையும், மீறப்படும்போது அதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவுமான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. சமூகப்பணியில் உரிமம் வழங்கும் அமைப்புகளே தொழில்சார் நடத்தை முறைகள் பின்பற்றுப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கின்றது. உரிமம் பெற்ற சமூகப்பணியாளர் மீது புகார் எழும்போது அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்த அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது.

English

Behavior in accordance with a profession's code of ethics. Most professions set forth explicit standards of professional conduct and provide processes for reporting, reviewing, and sanctioning violations. State social work licensing boards receive, investigate, and adjudicate complaints about a licensed social worker's professional conduct.