professional corporation (PC)

திறத்தொழிலினர் குழுமம்

தமிழ் விளக்கம்

ஒரு திறத்தொழிலை குழுமமாகச் செய்ய சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட நிறுவனம். தனியாகவோ அல்லது குழுவாகவோ இம்மாதிரியான நிறுவனங்களைப் பதிவு செய்யலாம். தனியாகத் தொழில் செய்யும் போது கிடைக்காத வரிச்சலுகைகள் நிறுவனமாகப் பதிவுசெய்து செயல்படும்போது கிடைப்பது மட்டுமல்ல, மற்ற பங்குதாரர்கள் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கத் தேவையுமில்லை. அவ்வாறு பதிவு செய்யப்பட்டபின் அதை மற்ற நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்ட நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் PC (Professional Corporations) அல்லது PA (Professional Association) என்ற எழுத்துக்கள் பின்னிணைக்கப்படும்.

English

A corporation or legal association formed to practice a profession. The professional or professional group that is incorporated has the letters PC or PA after the names and degrees. Members of the corporation are shareholders, and all are members of the profession being practiced. Individuals as well as groups can incorporate. Professional corporations allow professionals certain tax advantages unavailable to individuals and permit professionals to join together without assuming personal liability for the practices of other members.