professional sanctions

திறத்தொழில் சார்ந்த தண்டனைகள்

தமிழ் விளக்கம்

தான் சார்ந்த, தொழில் நெறியைப் பின்பற்றத் தவறிய அல்லது வேண்டுமென்றே மீறிய ஒரு திறத்தொழிலினருக்கு, அந்தத் தொழில்சார் நெறிமுறைகளைக் கண்காணித்து அமுல்படுத்தும் நிறுவனத்தால் வழங்கப்படும் தடைகள் அல்லது தண்டனை. சமூகப்பணியாளர்கள் நெறிமுறை பிறழும் போது, அவர்களுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்திற்கு உள்ளது. இத் தண்டனை பெரும்பாலும் சமூகப்பணியாளர் செய்த தவறுகளைப் பகிரங்கமாக அறிக்கையிடுவது, தவறிழைத்த சமூகப்பணியாளர் தொழில் செய்ய சில காலம் தடை விதிப்பது, அவரைப் பிற சமூகப்பணியாளர்களின் நன்னடத்தைக் கண்காணிப்பில் வைத்திருப்பது, குற்றம் கடுமையானதாக இருக்கும் பட்சம் அவரை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கி நிரந்தரமாகத் தொழில் செய்யத் தடை விதிப்பது போன்றவையாக இருக்கும்.

English

Punishments levied against a professional for violation of that profession's code of ethics. The most common punishments levied against social workers belonging to the National Associa- tion of Social Workers (NASW) include the requirement of retraining and professional counseling for a specified length of time, public notification of the violation, probation of membership status, and expulsion from membership.