Program Evaluation and Review Technique (PERT)

திட்டச் (செயல்பாடுகளை)க் கண்காணிப்பதற்கும் பரிசீலனை செய்வதற்குமான (நிர்வாக) உத்தி

தமிழ் விளக்கம்

PERT என்று சுருக்கமாக அழைக்கப்ப்டும் இந்த அணுகுமுறையானது, ஒரு திட்ட நிர்வாகத்தில் இலக்குகளையும் அதையடைய கையாளப்படும் வழிமுறைகளையும், அறிவுக்குப் பொருத்தமான முறையில் ஒன்றிணைத்துப் பார்க்க உதவுகிறது. இந்த அணுகுமுறை, ஒரு திட்டத்தை, பல்வேறு கூறுகளாகப் பிரித்து ஆய்வுக்குட்படுத்துகிறது. அதாவது ஒரு திட்டத்தின் மூலம் அடைய நினைக்கும் இலக்குகள், அந்த இலக்குகளை அடைய கையாளப்படவுள்ள செயல்கள், அந்தச் செயல்களைச் செய்வதற்கான வரிசை முறை, அந்தச் செயல்கள் ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பு, அதைச் செய்துமுடிக்கத் தேவைப்படும் கால அளவு, அச் செயல்களைச் செய்யத் தேவைப்படும் ஆதாரங்கள் அல்லது முன்னேற்பாடுகள் (பொருள், மனித திறன்) போன்றவற்றைத் தீர்மானித்து, அதை ஒரு சுய விளக்கமளிக்கும் தனித்துவம் கொண்ட வரைபடமாக்குகிறது. இந்த சுயவிளக்கமளிக்கும் வரைபடத்தின் மூலமாக திட்டச் செயல்களைக் கண்காணிக்கவும், செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில், கால அளவை அதற்கேற்பச் சரிசெய்து, செயல்பாடுகளை மாற்றிப் பரிசீலித்து, திட்டம் குறிப்பிட்ட காலத்தில் முடிய உதவுகிறது

English

A procedure commonly used in organizational management to relate goals to means in a rational and systematic way. PERT looks at program objectives and indicates all the activities that need to be performed, the time required for each, the sequence in which they should take place, and the resources required. This may be charted and posted so that all personnel are informed.