Progressive Era
முற்போக்கு சகாப்தம்
தமிழ் விளக்கம்
சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளும், செயல்பாடுகளும், பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளும் உயிர்ப்புடன் செயல்பட்ட, 1890 முதல் 1920 வரை நீடித்த காலகட்டத்தை பொதுவாக (அமெரிக்காவின்) முற்போக்கு சகாப்தம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிக்கின்றனர். உள்ளூர் மற்றும் தேசிய அளவில் மலிந்திருந்த ஊழல் அரசியல் நடைமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், தொழிலாளர் மற்றும் நுகர்வோரைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட சட்டமுயற்சிகள், குழந்தைகள், பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், வறியவர் குடியிருப்புகளில் மாற்றங்களைக் கொண்டுவர செயல்பட்ட சமுதாய ஊழியரகங்கள் என்று சமூக சீர்திருத்த வாதிகளும், எதிர்ப்பரசியலில் ஈடுபட்டவர்களும் முனைப்புடன் செயல்பட்டு புதிய அமெரிக்காவைப் படைக்க உத்வேகம் காட்டிய காலகட்டம்.
English
The name given by historians to the period (roughly 1890- 1915) in the United States when social reformers and advocates for socioeconomic justice were effectively demanding changes. The reformers and muckrakers sought and achieved changes in corrupt political practices at the local and national levels; established settlement houses in many poor neighborhoods; enacted laws for occupational and consumer safety; and influenced enactment of social welfare laws and programs for children, women, and disadvantaged people.