progressive social work
முற்போக்கு சமூகப்பணி, அடிப்படை மாற்றம் விழையும் சமூகப்பணி, சமூக மாற்றத்திற்கான சமூகப்பணி
தமிழ் விளக்கம்
வறியவர்களையும், வாய்ப்பற்றவர்களையும் மேலும் வறியவர்களாக, எளிதில பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவர்களாக உருவாக்கும் நிறுவன, கலாச்சார, சமூக நடைமுறைகளிலுள்ள அநீதிகளைக் களைவதில் கவனம் செலுத்தும் சமூகப்பணி அணுகுமுறை. முற்போக்கு சமூகப்பணியாளர்கள், பிரச்சனைகளைத் தனித்தனியாகத் தீர்க்க விரும்பாமல், பெரும்பாலான மக்களை, குறிப்பாக ஏழைகளைப் பாதிக்கும் சமூக நிறுவனங்களின் அடக்குமுறைகளை, தங்களின் சமூக அரசியல் செயல்பாடுகளின் மூலமாக கேள்விக்குட்படுத்தி, மக்களைத் திரட்டி அடிப்படை மாற்றங்களுக்காக முயல்கின்றனர். சமூக மாற்றத்தை முன்னெடுப்பதில், முற்போக்கு சமூகப்பணியாளர்களே, சமூகப்பணி வரலாறு நெடுக முனைந்து வந்துள்ளார்கள். முற்போக்கு சமூகப்பணியாளர்களின் சிந்தனைப் போக்கையும், செயல்பாட்டு முறைகளையும் 'சமூகப்பணி இன்று' (Social Work Today), 'வினையூக்கி - பொதுவுடமை நோக்கில் சமூக சேவைகள்' (Catalyst: A Socialist Journal of the Social Services), 'முற்போக்கான மனித சேவை' (Journal of Progressive Human Services) போன்ற பத்திரிகைகளின் எழுத்துக்களிலிருந்து அறியலாம் பார்க்க: பெர்தா பார்க்க: Bertha Capen Reynolds Society - பெர்தா கேபன் ரெனால்ட்ஸ் நிறுவனம் ரெனால்ட்ஸ், பெர்தா கேபின் (1885-1978) - தலைசிறந்த சமூகப்பணிக் கல்வியாளர். எழுத்தாளர். தொழிலாளர்கள் உரிமைக்காகப் பாடுபட்டவர். சமூகப்பணியாளர்களுக்கு தொழிற்சங்கம் ஏற்படுத்த முனைந்தவர். அடிப்படையில் மார்க்ஸீயவாதியான இவரின் முற்போக்கு கருத்துக்களை ஜீரணிக்கமுடியாத இவரின் கல்லூரி நிர்வாகம் இவரைப் பணிநீக்கம் செய்தது. முற்போக்கு சமூகப்பணியை முன்னெடுத்த இவரின் நினைவாக பெர்தா கேபின் ரெனால்ட்ஸ் சங்கத்தை (Bertha Capen Reynolds Society (B CRS), முற்போக்கு சமூகப்பணியாளர்கள் தோற்றுவித்தனர். இவர் எழுதிய புத்தகங்கள் - சமூகப்பணி தொடர்பாடலில் ஒரு பரிசோதனை (An Experiment in Short-contact Interviewing - 1932), சமூகப்பணி - கற்றலும் கற்பித்தலும் (Learning and Teaching in the Practice of Social Work - 1942), சமூகத் தனியாளர் பணி பற்றிய மறுசிந்தனை (Re-thinking Social Case Work - 1943), சமூகப்பணியும் சமூக வாழ்வும் - சமூகப்பணி தத்துவத்தில் ஒரு தேடல் (Social Work and Social Living: Explorations in Philosophy and Practice - 1951), பழக்கப்படாத பயணம் சமூகப்பணியின் 50 ஆண்டு கால வளர்ச்சி(An Uncharted Journey: Fifty Years of Growth in Social Work - 1963), வாடிக்கையாளருக்கும் சமுதாயத்திற்கும் இடையே - சமூகத் தனியாளர் பணியின் பொறுப்புக்கள் (Between Client and Community: A Study in Responsibility in Social Case Work - 1973).
English
An orientation in social work that focuses on the injustices in institutions, culture, and social practices that cause further disadvantage to the poorest and most vulnerable groups. Progressive social workers, who sometimes call their effort radical social work, seek to change oppressive institutions and practices primarily through social and political activism and organizing communities rather than case-by-case interventions. Progressive social workers, throughout the history of the profession, have been at the forefront of social change activities. Writings of progressive social workers have been found in the journals Social Work Today (1934-1942), Catalyst: A Socialist Journal of the Social Services (1978-1989), and currently the Journal of Progressive Human Services. See also Bertha Capen Reynolds Society.