projection

பிறர்மேல் (பழி) சுமத்துதல், புறத்தெறிவு, வெளிப்படுத்து, முன்னிறுத்தல், எதிர்கால நிகழ்வுக் கணிப்பு

தமிழ் விளக்கம்

ஒருவர் தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத, தன்னைச் சங்கடப்படுத்துகிற எண்ணங்கள், உணர்வுகள் மற்றவர்களிடமும் இருப்பதாகச் சொல்லி, அவரையும் குற்றவாளியாக்கி, தன்னுடைய குற்றவுணர்விலிருந்து விடுபடக் கையாளும் உளப்பாதுகாப்பு முறை. இந்த உளவியல் போக்கு பல வடிவங்களில் வெளிப்படும். பாராட்டத்தக்க செயல்களை மற்றவர்கள் செய்யும் போது, அவர் நிலையில் இருக்கும் பட்சம் நாமும் இப்படித்தான் செயல்பட்டிருப்போம் என்று உதாசீனப்படுத்தி பொறாமையை மறைத்துக்கொள்வது. Neurotic projection - மற்றவர்களின் மீதான வெறுப்பை மறைத்து எல்லோரும் தன்னை வெறுப்பதாக வெளிப்படுத்துவது. Complementary projection - மற்றவர்கள் செய்யும் பாராட்டிற்குரிய செயல்களைத் தன்னைப்போலவே செய்கிறார்கள் என்று ஒப்புமைப்படுத்தி ஈடு செய்துகொள்வது. Complimentary projection - மற்றவர்கள் செய்ததைப்போலவே தானும் பலமுறை செய்திருப்பதாக தன்னைத்தானே பாராட்டிக்கொள்வது. தன்னைப் போலவே தன்னைச் சார்ந்தவர்களும் சிந்திப்பதாக வெளிப்படுத்திக்கொள்வது.

English

A defense mechanism in which unacceptable aspects of one's own personality are rejected or attributed to another person or entity, such as a parent, a colleague, or the government.