projective identification

மற்றவர்களின் வெளிப்பாடுகளை அடையாளமாக்கிக் கொள்ளல்

தமிழ் விளக்கம்

மெலானி கிளீன் (Melanie Klein) என்ற உளப்பிணி சிகிச்சையாளரால் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட மனக்கோளாறு. இது புறத்தெறிவு, வெளிப்படுத்துதல் போன்ற உளப்பாதுகாப்பு முறை போல் தோன்றினாலும், அது தனி நபர் சம்மந்தப்பட்ட, ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடு. Projective Idendification இருவர் தொடர்புடையது. ஒருவர் மற்றவரைப் பற்றி வெளிப்படுத்தும் கூற்றுகளை மற்றவர் உள்வாங்கி அதைத் தன்னுடைய அடையாளமாக்கிக் கொள்வது. ஏன் ஒரு மாதிரி சோர்வாக இருக்கிறாய் என்று இயல்பாகவோ, திட்டமிட்டோ கேட்கும் போது உண்மையிலே சோர்வாக இருப்பதுமாதிரி நம்பத் தொடங்கி சோர்வுக்குள்ளாவது. இப்படி மற்றவர்களின் வெளிப்பாடுகளைத் தன்னுடைய அடையாளமாக்கிக் கொள்வது.

English

A process whereby an individual uses projection onto another member of his or her family, group, or organization and then induces that person or the others to behave in accordance with the projected attitudes. This process also may occur when the individual comes to perceive that others are behaving accordingly, whether or not they actually are doing so.