projective test
வெளிப்படுத்துவிக்கும் சோதனை, எறிவுப் பரிசோதனை
தமிழ் விளக்கம்
தெளிவற்ற, பல பொருள்தரும் தூண்டலை (படம், பொருள் அல்லது சம்பவம்) முன்வைத்து, அதன் மீது ஒருவருடைய கருத்தை வெளிப்படுத்த வாய்ப்புத் தரும்போது, அந்தத் தூண்டல் ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தி, ஒருவர் உலகையும் மனிதர்களையும் புரிந்துகொண்ட விதம் பற்றியும், அவரது நிறைவேறா இச்சைகள் அல்லது உளமுரண்பாடுகள் பற்றியும் அறிந்துகொள்ள உதவும் என்ற அனுமானத்தில் கையாளப்படும் ஆளுமைச் சோதனை முறை. தெளிவற்ற பலபொருள் தரும் படத்தைக்காட்டி, அதைப்பற்றிய கதையைச் சொல்லத் தூண்டும், கதைக்கரு புரிதிறன் பரிசோதனை அல்லது தன்னுணர்வை வெளிப்படுத்த உதவும் கருத்துச் சோதனை (Thematic Apperception Test), மைத்தடச் சோதனை (ink blot test) போன்றவை ஆழ்மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும் சோதனை முறைகளாகும்.
English
A procedure that uses systematic but unstructured stimulus objects or situations designed to elicit the subject's way of perceiving and understanding the world. The premise is that the subject will project unconscious thoughts onto the stimulus object and reveal possible psychopathology. Major projective tests are the Rorschach test and the Thematic Apperception Test (in which the subject is shown a series of vague pictures and tells a story for each). Certain forms of play therapy are also considered to be types of projective tests.