propaganda
பரப்புரை, கருத்துப் பரப்பு, பிரசாரம், பரப்பப்படுஞ் செய்தி, கோட்பாட்டுப் பரப்புதல் அமைப்பு, விஸ்தாரமான விளம்பரம், (தேர்தல்) பிரசாரம், (நல்வாழ்வுச் செய்தி) பரப்பலும் விளம்பரமும்
தமிழ் விளக்கம்
சில கருத்துக்களுக்கோ, நம்பிக்கைகளுக்கோ ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகாவோ அல்லது கண்டுகொள்ளாமலிருக்கவோ பொதுமக்களை நம்பவைக்க அல்லது பின்பற்றவைக்கச் செய்யப்படும் திட்டமிட்ட முயற்சிகளைப் பிரச்சாரம் எனலாம். பிரச்சாரம் பெரும்பாலும் நடுநிலையற்றதாகவும், உண்மைகளை வசதிக்கு ஏற்றவாறு மறைத்தும், சிலவற்றைப் பெரிதாக்கியும், ஒரு பொதுப்புரிதலை உருவாக்கும் நோக்குடையதாக இருக்கும். பிரச்சாரம் கவர்ச்சியான கோசங்கள் மூலமாக, படங்கள் மூலமாக, விளம்பரங்கள் மூலமாக, பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் என்று பலவற்றைக் கொண்டிருக்கும். பிரச்சாரப்பாணி என்பது பலசமயங்களில் ஏளனமாகப் பார்க்கப்பட்டாலும், கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுற்றுச் சூழல் பேணுதல் போன்ற பல செயல்பாடுகளில் விரும்பத்தக்க பலனை அளித்துள்ளது.
English
Planned efforts to convince segments of the public about certain opinions or beliefs. Usually this is done with powerful slogans, testimonials, attractive images, and promises of better circumstances and the ending of problems. Propaganda is usually an important part of any political or social movement.