property-tax-relief programs

சொத்துவரி நிவாரணத் திட்டம்

தமிழ் விளக்கம்

உதவி தேவைப்படும் வயதான முதியவர்கள் தங்கிருக்கும் வீடுகளுக்கும், சில விதிவிலக்குப் பெற்ற சொத்துக்களுக்கும், அமெரிக்க மைய அரசும் மாநில அரசுகளும் சொத்து வரியைக் குறைத்தும், சில நேரங்களில் சொத்துவரி செலுத்துவதை ஒத்திவைத்தும், சொத்துவரியை ரத்து செய்தும் கொடுக்கும் சலுகைகள். ஒரு குடியிருப்புப் பகுதியின் வீடுகளின் மதிப்பு உயரும் போது, அங்கே நீண்டகாலமாகக் குடியிருப்பவர்கள், சொத்து மதிப்பிற்கேற்ப வரி கட்ட வேண்டிவரும் போது, அதனால் நடுத்தரக் குடும்பங்கள் பாதிக்கப்படாமலிருக்க வரிச்சலுகைகள் வழங்கப்படுகிறது. குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு, முதியவர்களுக்கு, அல்லது வீடுள்ள ஊனமுற்றவர்களுக்கு வரிச்சுமையைக் குறைக்கக் கொடுக்கப்படும் வரிச்சலுகை (circuit breaker tax relief), பண்ணை வீடுகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை (homestead exemptions), மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வரி ஒத்திவைப்பு (homeowner tax deferrals) என்று பல வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.

English

State and local laws that reduce, defer, or cancel property taxes on the homes of needy older people. These programs are designed for people whose houses have escalated in value during their residency to the point that the taxes are more than they can afford. Three such programs are circuit breaker tax relief, homestead exemptions, and homeowner tax deferrals.