proprietary practice

தனியுரிமத் தொழில்முறை

தமிழ் விளக்கம்

சுயமாக, பிணிசாராத (clinical), செய்யும் சேவைகளுக்குக் கட்டணம் பெற்று செய்யப்படுகின்ற சமூகப்பணித் தொழில்முறை. இது பொதுவாக சுயாதீன சமூகப்பணி அல்லது நிறுவனச் சார்பற்ற சமூகப்பணி / சமூகப்பணியாளர் போன்றதுதான் என்றாலும், நிறுவனச் சார்பற்ற சமூகப்பணி பெரும்பாலும் பிணிசார்ந்த சமூகப்பணியோடு தொடர்புடையது. ஆனால் தனியுரிமச் சமூகப்பணியாளர்கள் தாங்கள் செய்யும் பணிகளுக்கேற்ப சில வசதிகளை அவர்களாகவே ஏற்பாடு செய்தும், சில வாடிக்கையாளர்களுக்கு அவர்களே சில பராமரிப்புப் பணிகளை செய்தும் கொடுப்பார்கள் எடுத்துக்காட்டாக போதைப் பழக்கத்திற்கு ஆளான வளரிளம் பருவத்தினருக்கு, அவர்களே தனிப்பட்ட முறையில் நலம் பேணகங்களை அமைத்திருப்பார்கள்.
பார்க்க: Private Practice in Socialwork - சமூகசேவை நிறுவனங்களிலோ அல்லது அரசின் சமூக நலத் திட்டங்களிலோ பணியாற்றாமல், தன்னிச்சையாகப் பணியாற்றும் சமூக சேவகர்கள். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகச் சேவை அளித்து அவர்களிடமிருந்தோ அல்லது காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தோ, இல்லை தங்கள் சேவையை வேண்டிய பிற நிறுவனங்களிடமிருந்தோ நிர்ணயித்த தொகையைச் சேவைக்கட்டணமாகப் பெறுவர். சமூகப் பணிக்காக தாங்களே ஒரு அமைப்பை ஏற்படுத்திச் செயல்படும் சமூகப்பணியாளர்களும் இதில் அடங்குவர்.

English

In social work, the delivery of social services for profit, generally in nonclinical settings by self- employed professionals. The term "proprietary practice" is essentially synonymous with private practice, except that the latter usually refers to clinical practice. Proprietary social workers typically offer their own facilities and professional skills in such capacities as private consultants, organizers of special interest groups, and caretakers for specific client groups. Some establish profit-making institutions for clients who require physical care along with special social services (for example, a private facility for adolescent substance abusers).