prosocial behavior
சமூகச் சார்பு நடத்தை, சமூக ஆதரவு நடத்தை
தமிழ் விளக்கம்
சமூகச் சார்பு நடத்தை என்பது, பலனை எதிர்பாராமல், மற்றவர்களுக்கு உதவி செய்யும், பொருளுதவி செய்யும், தன்னிடமிருப்பதைப் பகிர்ந்துகொள்ளும், பிறருடன் ஒத்துழைக்கும் தன்னார்வ நடத்தைப் பாங்கு. இது பிறர்நலப் பிரிய மனப்பான்மை (altruism) மற்றும் இணைத்துயர்மை கொள்ளும் மனப்பாங்கிலிருந்து உருவாகிறது. சமூகச் சார்பு நடத்தையே மற்றவர் உளமறிந்து செயல்படும் விருப்பம், அடுத்தவர் உரிமைகளை மதிக்கும் மனோபாவம், சுயநல (புகழடைய விருப்பம்) மனோபாவம், நடைமுறை ஞானம் (அப்படி செயல்பாட்டால்தான் முன்னேற முடியும் என்ற புரிதல்) போன்ற உணர்வுகளிலிருந்து வெளிப்பட்டு சமூகத்திற்கும் தனிமனிதர்களுக்கும் பலவகைகளில், பலநிலைகளில் பயன்படுகிறது. மற்றவர்களின் துயரத்தில் துயர்மை கொள்ளும் சமூகச் சார்பு மனோபாவம், மனிதருடன் பிறந்த இயல்பான பரிணாம வேர்களைக் கொண்டது.
English
Actions an individual, organization, or society takes to benefit society without the anticipation of external reward. What is considered to be of social benefit is relative and based on one's cultural values.