prosthesis
உடம்பில் செயற்கையுறுப்புக்கள் இணைத்தல், செயற்கை உறுப்பு, செயற்கை உறுப்புப் பொருத்தல், பொய்ப் பல், கட்டுப் பல், செயற்கைப் பல் (dental prosthesis)
தமிழ் விளக்கம்
உடலில் இழந்த ஒரு பகுதியை செயற்கை உறுப்பு கொண்டு சரி செய்தல். மனித உடலில் பலவகையான செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. செயற்கைக் கண் (glass eye), செயற்கை உறுப்பை நிரந்தரமாக வைத்தல் (implant), செயற்கைத் திசு கொண்டு அடைப்பை மூடுதல் (obturator), செயற்கை உறுப்பு பொருத்தல் (artificial limb legs), செயற்கை இதயம் (artificial heart), மார்பகத்தைப் பெரிதாக்குதல் மற்றும் செயற்கை மார்பகம் (breast implant), செயற்கை மூட்டு (artificial joint), செயற்கைப் பல் உள்வைத்தல் (dental implant), செயற்கை இதய வால்வு, ஆண்குறி உள்வைப்பு (penile implant), செயற்கையாகத் தடம் மாற்றுதல் (shunt), செயற்கையான விழியியக்க வெளித்தசைகள் (interocular lens implant) என்று பலவகையுண்டு. இவ்வுருப்புகள் நோயிலிருந்து மீட்கவும், உடலை இயல்பாகச் செயல்படவைக்கவும், அழகுணர்ச்சியின் பொருட்டும் என்று பல்வேறு காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முறையைச் செயற்கை உறுப்பு மாற்று மருத்துவம் என்று அழைக்கிறார்கள்.
English
The replacement of a missing body part with an artificial one. The part, such as a leg, tooth, or hand, is a "prosthetic device," and the professional who administers such treatment is a "prosthetic surgeon" or "prosthodontist."