prostitution

பரத்தமை, விபச்சாரம், பால்வினைத் தொழில், அடிச்சேரியாள்,

தமிழ் விளக்கம்

குச்சுக்காரி, கும்பதாசி, பணாங்கனை, வேசி, விலைமாது, கணிகை, வாரசுந்தரி, பண்டகாசினி, வாரஸ்திரீ, இருமனப்பெண்டிர், பேர்கெட்டவள், வேசை, கும்பை, பொதுமகள், மண்டூகை, வியபிசாரி, தட்டுவாணி, சூளை, வீச்சுக்காரி, கூத்தி, பரஸ்திரீ, சாதாரணை, பொட்டி, குண்டக்கணிகை, மண்டை, வரைவில்லி, சாலபஞ்சிகை, பொருள்விலையாட்டி, லவாடி, பொதுமகளிர், பாத்திலார், கொண்டிமகளிர், பொதுநலத்தார், பொதுவர், பெறுவதுகொள்வார்- பால்வினைத் தொழில் அல்லது பாலியல் தொழில் (prostitution) என்பது வளர்ந்தவர் ஒருவர், தனது உடலை அல்லது பாலியல் இன்பத்தை இன்னொரு வளர்ந்தவருக்கு, பணத்திற்கு விற்கும் தொழில். வளர்ந்தவர் இருவருக்கிடையில் நடைபெறும் பாலியல் ஈடுபாட்டில், பணம், சலுகை (பொருள்) பரிமாறப்படும்போது அதைப் பாலியல் வியாபாரமாகக் கொள்ளலாம். பெண்களே பெருமளவில் பாலியற் தொழிலாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும், ஆண்களும் குறிப்பிடத்தக்க அளவில் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். பாலியற் தொழில் சில நாடுகளில் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சில நாடுகளில் குறிப்பாக இசுலாமிய நாடுகளில் பாலியல் தொழில் மரண தண்டனை வழங்கப்படுமளவு கடுங்க்குற்றமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வணிகம் (sex trade), பாலியல் தொழில் (sex work), பண்டைய தமிழ்ச்சமூகத்தில் 'தாசித் தொழில்' என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆங்கிலத்தில் Prostitute எனபடும் சொல்லை, தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை அல்லது விபச்சாரி என அழைக்கலாம். பாலியல் வியாபாரத் துறையும், 'விபச்சாரம்' (Prostitution) என அடையாளப்படுத்தப்படுகின்றது. பாலியல் தொழில் செய்யும் பெண்களை சமூகப் பொதுவாழ்விலிருந்து ஓரங்கட்டுவதைத் தடுப்பதற்கும், அவர்கள் மீதும், அவர்களைச் சார்ந்தோர் மீதும் படிந்திடும் சமூக இழிவை நீக்கும் நோக்கத்தில் விபச்சாரம், விபச்சாரி போன்ற சொற்களைத் தவிர்த்துவிட்டு, 'பாலியல் தொழில்', 'பாலியல் தொழிலாளர்', 'பாலியல் வியாபாரம்' போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சொற்பிரயோகம் பாலியல் தொழிலை, பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை எனும் தளத்திலிருந்து அகற்றி, சமூகத்தின் ஒரு பொதுப் பிரச்னை எனும் தளத்துக்குக் கொண்டு வருவதற்கு உதவியுள்ளன.

English

The illegal act of offering oneself for sexual contact with another in exchange for money or other benefits. See also pandering.