protective

பாதுகாப்பு சேவைகள்

தமிழ் விளக்கம்

தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ளமுடியாத, அடுத்தவர்களால் ஏமாற்றப்படுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ள குழந்தைகள், முதியவர்கள், பல்வேறு வகையான இயலாமையால் பாதிப்பிற்குள்ளானவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மீது சமூகப்பணியாளரோ அல்லது பிற மானுட சேவைப் பணியாளர்களோ எடுத்துக்கொள்ளும் அக்கறை. சுயப் பரமரிப்பிற்கு இயலாதவர்களுக்கு உதவிட சமூகப்பணியாளர்கள், ஸ்தல ஸ்தாபன அரசுகளின் சமூக நலத் துறையாலோ அல்லது நீதிமன்ற உத்தரவாலோ நியமிக்கப்படுவது பொதுவான நடைமுறை. அதுமாதிரியான சந்தர்ப்பங்களில், உதவி தேவைப்படுபவர்கள் எந்த மாதிரியான இக்கட்டான நிலையில்லுள்ளார்கள் என்பதைப் பரிசீலித்து, அந்த இக்கட்டுகளைக் குறைத்து, சீராக்கி, அவர்களுக்கான பல்வேறு உதவிகளை பெற்றுத்தர சமூகப்பணியாளர்கள் முயல்வர்.
protective services - interventions by social workers and other

English

her professionals on behalf of individuals-such as children, people with disabilities, older people, and people with mental retardation-who may be in danger of harm from others or who are unable to take care of their own physical needs. The social workers are usually employed by the local Department of Social Services (DSS) or a similar agency, or they may work with the courts or law enforcement agencies. The primary job is to investigate situations in which a person may be at risk (as in child abuse or neglect of a disabled person), to help ameliorate the situation, to minimize further risk, and to find and facilitate alternative placements and resources for the person at risk.