protest movement

எதிர்ப்பு இயக்கம்

தமிழ் விளக்கம்

மக்களைப் பாதிக்கும் அல்லது அதிருப்தியுறவைக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நடைமுறைகளையோ, கொள்கைகளையோ அல்லது சம்பவங்களையோ எதிர்த்தும் அல்லது ஒத்துழைக்க மறுத்தும் திட்டமிட்டுத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பு. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தங்கள் எதிர்ப்பை மக்கள் பலவழிகளில் வெளிக்காட்டுவர். வேலை நிறுத்தம், மறியல், பேரணி / ஊர்வலம் செல்லல், பிரச்சாரம் செய்தல் போன்ற வழிகளைக் கையாள்வர். எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டில் கூடங்குளம் எதிர்ப்பியக்கம், கள் இறக்குவோர் ஆதரவு இயக்கம், மதுவிலக்கு இயக்கம், மணல் கொள்ளைக்கு எதிரான இயக்கம் போன்ற இயக்கங்களைச் சொல்லலாம்.

English

An organized effort by a part of the public to show dissatisfaction and possible noncompliance with a new law, policy, or situation. Those involved in the movement use a variety of tactics to inform their political leaders, policymakers, or people in positions of authority over them of their dissatisfaction. The tactics include strikes, propaganda, marches, and political action.