Protestant ethic

பிராட்டஸ்டண்ட் நெறிகள் / அறங்கள்

தமிழ் விளக்கம்

கடின உழைப்பு, சுய ஒழுக்கம், இன்ப நுகர்ச்சியைத் தள்ளிவைத்தல் / தாமதப்படுத்துதல், சிக்கன வாழ்க்கை / ஆடம்பரம் தவிர்த்தல் போன்ற நெறிகளைப் பின்பற்றி வாழும்போது அது வாழும் காலத்திலேயே அதிக செல்வத்தையும், சமூக அந்தஸ்தையும், அதிக விடுதலையுணர்வையும் அளித்து இறுதியில் பரலோகத்தின் சொர்க்க வாசல்களைத் திறந்து வைக்குமென்று பிராட்டஸ்டண்ட் மதம் போதித்த அறவிழுமியங்கள். இந்த விழுமியங்கள் பிராட்டஸ்டண்ட் மதத் தலைவர்களான ஜான் கால்வின், மார்ட்டின் லூதர், சார்லஸ் மற்றும் ஜான் வெஸ்லி John Calvin, Martin Luther, Charles and John Wesley) போதனைகளிலிருந்து பெறப்பட்டு, அமெரிக்க நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இது ஒருவகையில் பரலோக சாம்ராஜ்யத்தின் சொர்க்க வாசல் திறக்கப்படவேண்டுமென்றால், தேவாலயத்திற்கு தொடர்ந்து வருதல், பாவங்களை ஒப்படைப்பு செய்தல் மற்றும் மதச்சடங்குகளை நியமமாக, பக்தியுடன் மேற்கொண்டொழுகல் என்று போதித்த கத்தோலிக்க மத போதனைகளுக்கு மாற்றாக கடின உழைப்பு, சுயஒழுக்கம், சிக்கன வாழ்க்கையே சுவர்க்கம் புக போதுமானது என்று போதித்தது. இந்தப் போதனைகளின் தாக்கம், சமூக, பொருளியல் தளங்களில் மாற்றத்தை உருவாக்கியதென்றும், முதலாளித்துவ எழுச்சிக்கு வித்திட்டதென்றும் சமூகவியாலாளர் மாக்ஸ் வெபேர் தன்னுடைய பிராட்டஸ்டண்ட் அறங்களும், முதலாளித்துவ எழுச்சியும் (Protestant Ethic and the Spirit of Capitalism) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

English

A value and behavioral orientation that is generally associated with hard work, self-discipline, deferred gratification, and the belief that such efforts will result in rewards, possibly including more money, higher social status, greater freedom, and eventual entry into heaven. This orientation derives its name from the moral teachings of such Protestant leaders as John Calvin, Martin Luther, and Charles and John Wesley and has guided the conduct of many middle-class U.S. families since colonial times. See also Puritanism.