provision systems

தேவைப்பொருள் ஏற்பாடு / வழங்குனர் தொகுப்பு

தமிழ் விளக்கம்

மக்களின் தேவையை, அவர்களின் விருப்பத்தை, அவர்களின் வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யும் பொருட்களை, சேவைகளை வழங்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூக அமைப்புகள். இந்த அமைப்புகள் ஒரு வலைப்பின்னலாக செயல்பட்டு மக்களுடைய தேவைகளையும், அவர்கள் கோருவதையும் மனதில் வைத்து, அதைப் பூர்த்தி செய்யும் வகையில் இயற்கை மற்றும் சமூக வளங்கள் / வசதிகளை உருவாக்கி, அதை மக்கள் பயன்பாட்டிற்கு அளித்து, அதனுடைய விளைவுகளை மதிப்பீடு செய்து, அதற்கேற்றார் போல் சீரமைத்துக்கொள்வார்கள். அந்தந்த சமூக இயல்பிற்கு ஏற்றமாதிரி, இந்த மாதிரியான ஏற்பாடுகள் தன்னலம் கருதியோ, போட்டி மனப்பான்மையாலோ, கூட்டுறவு முறையிலோ அல்லது சமத்துவம் கருதியோ உருவாகிச் செயல்படும்.

English

The interacting social organizations that supply the products and services that people need, want, and demand; also, the network of social relationships that, together or individually, identify products and services needed and demanded, develop the necessary natural and social resources, distribute those resources, and evaluate the effects. In different societies, these systems may have a competitive, self-interested orientation or an egalitarian, cooperative orientation.