proxemics

அண்மையியல், இடமும் தொடர்பாடலும்

தமிழ் விளக்கம்

இடம் சார்ந்த அண்மை உறவு முறைகள், மனிதர்கள் மீது எந்த மாதிரியான தாக்கங்களை அல்லது செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதைப் பற்றி அறியும் அறிவியல். மனிதர்களின் இடம் சார்ந்த அண்மை நான்கு நிலைகளில் 1. நெருக்கமானதாக, 2, தனிநபர் சார்ந்ததாக 3. சமூகம் சார்ந்ததாக 4. பொதுவெளியாக அமைவதாகவும், இதிலுள்ள அண்மையும் இடைவெளியும் மனிதர்களின் உறவுகளை, தொடர்பாடலைப் புரிந்துகொள்ளவும் அதற்கேற்றாற்போல் அதை மறுசீரமைக்க உதவுவதாகவும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உறவுமுறைகளைத் தீர்மானிக்கும் அண்மையும் இடைவெளியும் கலாச்சாரத்தால் கட்டமைக்கப்பட்டு வேறுபடுகிறது. வீடுகளின் அமைப்பு, தெருக்களின் அமைப்பு, வீட்டினுள் செய்யப்படும் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரங்கள் மனித உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், உறவுகளை வளர்க்கும் வடிவமைப்பில் சமூகவியலாளர்களும், கட்டிடக் கலைஞர்களும் கவனம் செலுத்துகின்றனர்.

English

Spatial behavior; the study of the way humans influence one another through the use of space. This includes such factors as the distance people need between one another for various types of communication and the arrangement of their furniture, homes, and streets to facilitate certain kinds of communications. See also communication theory, sociofugal arrangements, and sociopetal arrangements.