Prozac
உளச்சோர்வு போக்கிகள்
தமிழ் விளக்கம்
மூளையில் செரட்டானின் (serotonin) என்ற வேதிப்பொருளின் அளவு குறைந்தாலோ அதிகரித்தாலோ மனநிலையில் மாற்றம் ஏற்படும். செரட்டானின் அளவைச் சமநிலையில் வைத்திருக்க உதவும் மருந்தே பிரோசக். இது ஒரு உளத்திறன் ஊக்குவிக்கும் மருந்து, ஊக்கமளிப்பது, சுறுசுறுப்பைக் கூட்டுவது. உளநோய் மருத்துவர்களாலும், பிற மருத்துவர்களாலும், நோயாளிகளை மனச் சோர்விலிருந்து விடுவிக்கக் கொடுக்கப்படும் உளநிலை மாற்றி மருந்துகள். கீழே கண்ட வர்த்தகப் பெயர் கொண்ட உளத்திறன் ஊக்குவிக்கும் மருந்துகள் (Elavil, Vivactil, Tofranil, Pertofrane, Sinequan, Marplan, Parnate, Prozac, மற்றும் Nardil) மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. பல நாள் உபயோகத்திற்குப் பின்னரே அது மருத்துவர்கள் சொன்ன பலனை, சிறிது சிறிதாகக் கொடுக்கும்.
English
A psychotropic drug widely used in the treatment of depression.