pseudocyesis
கர்ப்பமாயை, கருவுற்ற உணர்வு, கருவுற்ற பொய்வுணர்வு, போலித் தாய்மை உணர்வு
தமிழ் விளக்கம்
கருவுற்றிறுக்காவிட்டாலும், கருவுற்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் கர்ப்பமாயை. அல்லது கருவுற்ற பொய்யுணர்வு. கருவுற்ற பெண்களுக்கு மாத விலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல், வாசனையைக் கண்டால் நெடி, மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படுவது மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரிவது, மார்பகக் காம்புகள் கருப்பாக மாறுவது, மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு, புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை போன்ற கர்ப்பகால அறிகுறிகளில் பெரும்பாலான அறிகுறிகளை கர்ப்பமாயைக்கு உட்பட்ட பெண்களும் வெளிப்படுத்துவர்.
English
False pregnancy; a woman's sensation of being pregnant or showing some of the symptoms of pregnancy when she is not. Symptoms might be due to psychogenic factors, physiological changes, or both.