psychiatric emergency
மன நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை
தமிழ் விளக்கம்
எதிர்பாராத விதமாக மன நோய்க்கான அறிகுறிகளோடு ஒருவர் நடந்துகொள்ளும் போது அவருக்குத் தேவைப்படும் மனநோய் மருத்துவர் அல்லது மனநலக் குழுவினரின் கவனிப்பும் சிகிச்சையும். தற்கொலை முயற்சி, தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுதல், அச்சுறுத்தும் மாயத்தோற்றங்கள் அல்லது ஒலிகள், வலிப்பு அல்லது மூர்ச்சையால் ஏற்படும் நினைவிழப்பு, போதை மயக்கத்தில் செய்யத் துணியும் தவறுகள் அல்லது வேறு காரணங்களால் ஏற்படும் மனப்பிறழ்ச்சி போன்ற அறிகுறிகளுக்கு அவசரச் சிகிச்சை தேவைப்படும். போதை மருந்துகளின் தொடர் உபயோகமும் அதிலிருந்து விடுபட நினைக்கும் போதும் அவசர நிலையை உருவாக்கி சிகிச்சைக்குத் தேவை ஏற்படுத்தும்.
English
Sudden or unexpected behavior in a person that indicates symptoms of mental disorder requiring immediate action by a psychiatrist or members of a mental health team. The most common behaviors that result in psychiatric emergencies include suicide attempts or threats, active hallucination that seems threatening, fugue states, drug-induced harmful behavior, and precipitous deterioration of the mental faculties. Sometimes this deterioration is related to the misuse or discontinuance of prescribed psychotropic drugs.