psychiatric labels

குணாதிசய முத்திரையிடல், மனநல முத்திரையிடுதல்

தமிழ் விளக்கம்

நோயைக் குறிக்கவோ அல்லது மனநலத்தை அறியவோ உளப்பிணி மருத்துவர்களும், மருத்துவர்களும், மனநலச் சிகிச்சையளிப்பவர்களும் பயன்படுத்தும் நோய்க்குறிகளின் விளக்கம். இந்த விளக்கம், நோயறிமுறைகளை துல்லியமாகக் குறிப்பதாகவோ (எடுத்துக்காட்டாக bipolar disorder இருமனக் குழப்பச் சீர்கேடு - மனத் தளர்ச்சி X மன எழுச்சி - சோகம் X களிப்பு) மந்த - மிகை எழுச்சி குழப்பச் சீர்கேடு, இருமனக் கலப்புக் குழப்பம்), borderline personality (தீர்மானிக்க இயலா ஆளுமைச் சிக்கல்) அல்லது நோய்க்குறிகளைப் பொதுமைப்படுத்தி குறிப்பதாகவோ எடுத்துக்காட்டாக phobic (பீதிக்குள்ளாதல் / அச்ச உணர்வு), drug addict (போதையடிமை) இருக்கலாம். இது மாதிரி முத்திரையிடல், பிரச்சனைகளை எளிமைப்படுத்தி, பிரச்சனைக்கான சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களை மறக்கடித்து, மனிதர்களின் தனிப்பண்பைப் புறக்கணித்து, தனித்தன்மையைப் புரியவிடாமல் செய்துவிடுமென்ற விமர்சனங்கள் உண்டு. மாறாக முத்திரையிடல் நோயின் தன்மையைச் சிகிச்சையளிக்கும் குழுவினர் புரிந்துகொள்ளவும், நோய் மற்றும் நோய்க்குறிகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்யவும் உதவும் என்ற ஆதரவு வாதமும் உண்டு. இருப்பினும் இது மாதிரியான முத்திரையிடல் என்பது நோய்களைக் குறிக்கமட்டும் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும், மனிதர்களின் ஆளுமையைச் சித்தரிக்க பயன்படுத்தலாகாது என்ற கருத்தொற்றுமை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

English

Descriptive or diagnostic terms applied to people by psychiatrists, physicians, or mental health professionals to characterize a person's psychiatric processes. They may be formal diagnostic terms (such as bipolar disorder or borderline personality disorder) or less formal characterizations (such as "phobic" or "drug addict"). Critics of psychiatric labels say their use is inaccurate and dehumanizes people, precludes the principle of individualization, oversimplifies problems, and minimizes the impact of the psychosocial and environmental systems in which they occur. Proponents of psychiatric labeling say it is necessary for efficient communication among helping professionals and important for the conduct of research. Formal diagnostic terms apply to illnesses and should not be used as descriptive nouns to characterize people (such as "a schizophrenic").