psychiatric social work
உளப்பிணி சமூகப் பணி, மனநலச் சமூகப்பணி
தமிழ் விளக்கம்
உளப்பிணியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்படும் சமூகப்பணி. உளப்பிணி மருத்துவருடனோ, உளநல மருத்துவக் குழுவினருடன் இணைந்தோ அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் இணைந்தோ மனநோயாளிகளுக்கு சமூகப்பணியாளர் கொடுக்கும் சமூக உளவியல் சிகிச்சை மற்றும் பிற சமூக சேவைகள். சமூகப்பணியில் முதுநிலைப் பட்டமும், உளப்பிணி தொடர்பாகப் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்களே பொதுவாக உளப்பிணி சமூகப்பணியாளர்களாக சேவைபுரிவார்கள். தற்போது உளப்பிணி சமூகப்பணி என்ற சொற்பிரயோகத்திற்கு பதிலாகப் பிணிசார்ந்த சமூகப்பணி என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.
English
Social work in a mental health setting. The psychiatric social worker provides psychosocial therapy and other social services for those with mental disorders and, in collaboration with the psychiatrist and other members of the mental health team, works with the patient's family members. The worker usually has an MSW or higher degree and additional experience in working with psychiatric problems. The "psychiatric social work" designation is largely been replaced by the term "clinical social work." See also American Association of Psychiatric Social Workers (AAPSW).