psychiatrist
உளப்பிணி மருத்துவர், மனநல மருத்துவர்
தமிழ் விளக்கம்
முறையான மருத்துவக் கல்வியுடன், மனநோய்களைப் பற்றிய மருத்துவக் கல்வியும் அங்கீகரிக்கப்பட்ட மனநோய் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பயிற்சியும் பெற்று, மன நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு பயிற்சியும், கல்வியும் பெற்ற மருத்துவர். மன நோய்களைக் கண்டறிந்து, நேரடியாகவோ அல்லது அவரின் மேற்பார்வையிலோ, மருத்துவமனைச் சூழலிலோ மனப்பிணி சிகிச்சையையோ அல்லது மருந்துகளையோ பரிந்துரைப்பவர்.
English
A physician who specializes in the treatment of mental disorders. The psychiatrist makes specific diagnoses of the mental disorder and prescribes, supervises, or directly provides the necessary treatment, which may include psychotherapy, psychotropic drugs, and hospitalization with milieu therapy. Qualifications to be a psychiatrist include four years of medical school and four or more years of approved residency training, usually in mental hospitals or hospital psychiatric wards.