psychic energy

மன ஆற்றல், மனோசக்தி, உடலியல்பு கடந்த ஆற்றல், உளஞ் சார்ந்த / ஆன்மிக / உடலியல்பு கடந்த / இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட / ஆவியுலகு சார்ந்த ஆற்றல்

தமிழ் விளக்கம்

ஒரு மனிதனின் சிந்தனை, செய்திகளைப் புரிந்துகொள்ளும் மற்றும் சேமித்துவைக்கும் திறன், அதை மீட்டெடுக்கும் பாங்கு போன்றவற்றில் வெளிப்படும் மனம் மற்றும் உடல் சார்ந்த இயல்பு கடந்த ஆற்றல். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம், வைராக்கியத்துடன் (சஞ்சலமற்று உறுதியுடன்) செயல்படுதல், இன்னும் பல இயற்பியல் நியதிகளுக்கு அப்பாற்பட்டு செயல்புரியும் திறன் போன்றவற்றை உளசக்தி என்கிறோம்.

English

An individual's mental and physical drives and forces that lead to the processes of the mind, including thinking; remembering, storing, and retrieving information; providing ego defense mechanisms; acting willfully with determination; and many other functions.