psychoanalysis
உளப் பகுப்பாய்வு
தமிழ் விளக்கம்
உளநிலைப் பகுப்பாய்வு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதிகளிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆஸ்திரியா நரம்பியலாளர் சிக்மண்ட் பிராய்ட் உருவாக்கிய உளவியல் மற்றும் உளவியற் சிகிச்சை முறையாகும். உளநிலைப் பகுப்பாய்வு பல கோணங்களில் வளர்ச்சியுற்று, விமர்சனத்திற்கு உள்ளாகி, விரிவடைந்து செல்லும் கோட்பாடாகும். உளப்பகுப்பாய்வு சில கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. 1. மனித நடத்தை, அனுபவம் மற்றும் புலனறிவு என்பன பகுத்தறிவுக்கு மாறான தூண்டுதலால் முடிவு செய்யப்படுகிறது. 2. இத்தூண்டுதல்களில் அனேகமானவை நினைவிழந்தவையாகும். 3. பகுத்தறிவிற்கு மாறான இத்தூண்டுதல்கள் விழிப்புணர்வுவைச் சந்திக்கும் போது ஏற்படும் தடையை, பாதுகாப்புச் செயலமைவு (Defense mechanisms) எனும் வடிவில் சந்திக்கின்றது. 4. ஆளுமையின் மரபுரிமையாய்ப் பெறப்பட்ட இயற்கை மனநிலை தவிர ஒருவருடைய அபிவிருத்தி ஆரம்ப கால குழந்தைப் பருவ சம்பவங்களால் முடிவு செய்யப்படுகின்றது. 5. மனித நடத்தையில் நனவிலி மனச் செய்ற்பாங்குகள் அன்றாட நடத்தையில் முரண்பாடுகளை உருவாக்கி அது நரம்புக் கோளாறு, திகில், மன அழுத்தம், நாத்தவறுகள், பெயர்களை மறந்து போதல், தானே விபத்துகளுக்குள்ளாதல், நோயுறுதல் போன்றவற்றை உருவாக்குக்கின்றன 6. நனவிலி மனத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுதல் என்பது நனவிலி மனதை உணர்வுநிலைக்கு கொண்டு வருதலால் மட்டுமே முடியும். மனநோயை குணப்படுத்துவதற்குரிய ஒரு முறையாக உளநிலைப் பகுப்பாய்வு முறை பிராய்டால் கையாளப்பட்டது. உளப்பகுப்பாய்வில் மனித ஆளுமையின் கட்டமைப்பு பற்றிய கோட்பாடும், கவலை, தற்காப்பு இயக்க முறை, இனப்பெருக்க ஆற்றலழிவு, இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல், உணர்ச்சி மேம்பாடு ஆகியவை பற்றிய உளவியல் கோட்பாடுகளும் உள்ளடங்கும் உளபகுப்பாய்வு மனிதனைப் புரிந்துகொள்ளவதில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. இக்கோட்பாடும், இக்கோட்பாட்டில் பயன்படுத்தப்பட்ட கலைச் சொற்களும் மனித நடத்தையைப் புரிந்துகொள்ள, மனநோய்களைத் தீர்க்க பெருமளவு உதவின. தனிப்பட்ட ஒருவரின் 'உணர்வுந்தல்' (Id), 'நான்' என்னும் ஆணவத்தைக் குறிக்கும் 'தன்முனைப்பு' (ego), கீழ் மனத்தின் செயலை இடித்துரைத்துக் கட்டுப்படுததும் தன்மை வாய்ந்த 'மேல் மனம்' (super ego) எதிர்பாலராகிய பெற்றோர் வகையில் பிள்ளைகளுக்கு உட்செறிவாக இருப்பதாகக் கருதப்படும் அடங்கிய 'உள்ளுணர்ச்சி' மரண விழைவு போன்ற கருத்துக்கள், ஃப்ராய்டு எடுத்துரைத்த உளபகுப்பாய்வு மூலமே வழக்கத்திற்கு வந்தன.
2. உளப்பகுப்பாய்வு - வெளிமனத்தை ஓயவைத்து ஆழ்மனத்தை வெளியே கொண்டுவரும் ஆய்வுமுறை. மனித மனத்தை வெளிமனம், ஆழ்மனம், நனவிலி மனம் எனப் பிரித்து நோக்கும் ·ப்ராய்டிய கோட்பாட்டின் செயல்முறை இது.
2. உளப்பகுப்பாய்வு - வெளிமனத்தை ஓயவைத்து ஆழ்மனத்தை வெளியே கொண்டுவரும் ஆய்வுமுறை. மனித மனத்தை வெளிமனம், ஆழ்மனம், நனவிலி மனம் எனப் பிரித்து நோக்கும் ·ப்ராய்டிய கோட்பாட்டின் செயல்முறை இது.
English
A method for diagnosing and treating mental illness and achieving better self-awareness using the principles of psychoanalytic theory originated by Austrian physician Sigmund Freud (18561939).