psychoanalytic theory
உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு
தமிழ் விளக்கம்
சிக்மண்ட் பிராய்ட் (1856-1939) அவர்களால் பிரேரிக்கப்பட்ட மனித ஆளுமை வளர்ச்சி பற்றிய சிந்தனையும், மன நோய்களுக்கு சிகிச்சையளிக்க அவர் பரிந்துரைத்த வழிமுறைகளும், அவருடைய சிந்தனையை மையப்படுத்தி, அவருடைய மாணவர்களான கார்ல் யுங்க் (Carl Jung -1875-1961), ஆல்பிரட் அட்லர் (Alfred Adler 1870- 1937), ஓட்டோ ரேங்க் (Otto Rank 1884-1937), வில்லியம் சிகேள் (Wilhelm Stekl), மெலானி கிள்ன் (Melanie Klein), எர்னஸ்ட் ஜோன்ஸ் (Ernest Jones - 1879-1958) போன்றோர் பெற்ற அனுபவத்தின் மேம்பாடாக உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு திகழ்கிறது. உளப்பகுப்பாய்வின் பெரும்பாலான கண்ணோட்டங்களான களிப்புறு கோட்பாடு (pleasure principle), மெய்மை அல்லது நிதர்சனக் கோட்பாடு (reality principle), இன்ப இயல்பூக்கம் அல்லது உயிர்விசை (libido), நனவிலி நிலை (unconscious), அனுவுள்ளுணர்ச்சி, ஆழ்மனம், நனவிலி நிலையின் இயக்கத்தின் உந்து என்று பலவாறாகச் சொல்லப்படும் id, அகமனம், நனவு மனம், தன்முனைப்பு என்று சொல்லப்படும் ego, மேல்மனம், அதியுயர் மனக்கூறு என்று சொல்லப்படும் superego, உளப்பாலியல் அபிவிருத்திக் கோட்பாடு (psychosexual development theory) போன்றவை பிராய்டால் பிரேரிக்கப்பட்டதாகும். இதுதவிர இன்னும் பல உளவியலறிஞர்கள் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை தங்கள் சிந்தனைகளால் செழுமையுறச் செய்தனர். அன்னா பிராய்டின் ((Anna Freud 1895-1982) உளப்பாதுகாப்புப் பொறிமுறைகள் (defense mechanisms) டிக்ஸின் (H.V.Dicks) நெருக்கமானவர் மீதான உறவு (object relations theory), கார்ல் யுங்கின் (Carl Jung) பொது நனவிலி மனம் மற்றும் மூலப்படிமம் (collective unconscious and archetypes) எரிக் எரிக்சனின் (Erik Erikson 1902-1994) சமூக உளவியல் அபிவிருத்தி கோட்பாடு (psychosocial development theory) மார்கரெட் மேலரின் (Margaret Mahler) தனித்திருத்தலும் தனித்தன்மையுடனிருத்தலும் (separation-individuation) சல்லிவனின் (Harry Stack Sullivan 1892-1949) அடையாளங்களால் ஏற்படும் மதிப்பீட்டுச் சிதைவு (parataxic distortion) போன்ற கோட்பாடுகள் உளப்பகுப்பாய்வை மேலும் செழுமையடையச் செய்தன. உளப்பகுப்பாய்வுக் கோட்பாடும் அதையொட்டிய அகஉளவியலும், பிராய்டிற்குப் பிந்தைய நவ பிராய்டியர்களின் சிந்தனைகளும் சமூகப்பணியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. பிணி சார்ந்த சமூகப்பணி (clinical social work practice) மற்றும் சமூகத் தணியாளர் பணியில், பிரச்சனைகளையறிய சமூகப்பணியாளர்கள் கையாண்ட வழிமுறைகளில் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின் (1940- 1965) செல்வாக்கையும், தாக்கத்தையும் கண்டறியலாம்.
English
The hypotheses and treatment applications about human personality and its development as proposed by Sigmund Freud (1856-1939), with later elaborations and modifications by many theorists and analysts such as Carl Jung (1875-1961), Alfred Adler (1870- 1937), Otto Rank (1884-1937), Wilhelm Stekl, Melanie Klein, and Ernest Jones (1879-1958). Most of the concepts now recognized as psychoanalytical are from Freudian theory (that is, the pleasure principle, the reality principle, the libido, the unconscious, the id, the ego, the superego, and psychosexual development theory). Concepts that were emphasized by other analysts include defense mechanisms (Anna Freud, 1895-1982); object relations theory (H. V. Dicks); inferiority complex (Adler); collective unconscious and archetypes (Jung); psychosocial development theory (Erik Erikson, 1902- 1994); separation-individuation (Margaret Mahler); and par-ataxic distortion (Harry Stack Sullivan, 1892-1949). Psychoanalytic theory and especially its progenies ego psychology and neo-Freudian theory have been influential in the theories of clinical social work practice and social casework, particularly in the diagnostic school in social work, and especially between 1940 and 1965.