psychodynamic
உளவல்லாற்றியம், உளஇயக்கம்
தமிழ் விளக்கம்
மனிதர்களின் அறியும் ஆற்றல், உணர்வுகள், தன்விருப்புடைய செயல்கள் போன்றவை ஒருபுறம் அவருடைய மரபணுக்கூறுகளாலும், பாரம்பரியத்தாலும், சமூக கலாச்சாரச் சூழலாலும், புலனுணர்வுத் திறன் மற்றும் திறனின்மையாலும், எதிர்கொள்ளும் தனித்துவ அனுபவங்களாலும் மற்றும் நினைவுகளாலும் தாக்கம் பெற்று அவருடைய நனவு மற்றும் நனவிலி மன அனுபவங்களால் வடிகட்டப்பட்டு ஆளுமையாகவும், செயலூக்கமாகவும் வடிவெடுக்கின்றது என்ற கண்ணோட்டம். மனித நடத்தையும், ஆளுமையும், Id (அனுவுள்ளுணர்ச்சி, ஆழ்மனம், நனவிலி நிலையின் இயக்கத்தின் உந்து என்று பாலவாறாகச் சொல்லப்படும்), Ego (அகமனம், நனவு மனம், தன்முனைப்பு என்று சொல்லப்படும்), Superego (மேல்மனம், அதியுயர் மனக்கூறு என்று சொல்லப்படும்) போன்றவற்றின் பரஸ்பரத் தொடர்பாடலால் ஏற்படுகிறது என்ற உளபகுப்பாய்வுக் கோட்பாட்டின் நீட்சியாக கருதப்படுகிறது.
English
Pertaining to the cognitive, emotional, and volitional mental processes that consciously and unconsciously motivate one's behavior. These processes are the product of the interplay between one's genetic and biological heritage, the sociocultural milieu, past and current realities, perceptual abilities and distortions, and one's unique experiences and memories.