psychologist

உளவியலாளர், மனோதத்துவ நிபுணர், உள உணர்வு செயற்பாடுகளை ஆய்பவர், உள உணர்வு செயற்பாடுகளைப் பற்றிப் போதிப்பவர்

தமிழ் விளக்கம்

மனித நடத்தைகளைப் பற்றிய, மனதின் செயல்பாடுகளைப் பற்றிய கல்வியறிவும், அனுபவ ஞானமும் பெற்று, அதையொட்டி மனித நடத்தைகளைகளை மதிப்பீடு செய்து, மனச்சிக்கல்களைத் தீர்க்க வழிகாட்டுபவர். உளவியலாளர்கள், பரிசோதனை உளவியல், கல்வி உளவியல், ஆலோசனை உளவியல், தொழிலக உளவியல், பிணிசார்ந்த உளவியல் என்று பல்வேறு துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பர். பிணிசார்ந்த உளவியல் சேவை வழங்குபவர்கள், நோய்கள் என்ன மாதிரியான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும், ஒருவரின் மனநிலை எம்மாதிரியான உடலுபாதைகளுக்கு இட்டுச்செல்லும் என்பதையறிந்து, அதற்கேற்ப நோயாளிகளுக்கு ஆலோசனை சொல்வர். பிணி சார்ந்த உளவியலாளர் ஆகவேண்டுமென்றால் உளவியலில் மேற்படிப்பும், பிணி சார்ந்த உளவியலில் அனுபவம் அல்லது ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

English

A professional who studies behavior and mental processes and may apply that knowledge to the evaluation and treatment of a mental disorder. Psychologists have many specialties, including experimental, educational, counseling, industrial, and clinical orientations. Clinical psychologists are those who apply the knowledge about human behavior to the treatment of various psychosocial disorders, usually in offices, hospitals, or mental health settings. To become a clinical psychologist, a person must obtain an academic degree in psychology, either a master's degree or a PhD or PsyD degree from an accredited academic institution. This is usually followed by a requirement of two years of supervised work experience.