psychoneurosis
உளவழி நரம்பு நோய்
தமிழ் விளக்கம்
தற்போது neurosis என்றழைக்கப்படும் உளக்கோளாறு, உளவழி நரம்பு நோய், நரம்புத்தளர்வு மற்றும் anxiety disorder என்றழைக்கப்படும் பதட்டச் சீர்கேடு போன்றவைகளைக் குறிக்க கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு, நோயறிமுறையில் வழக்கொழிந்த சொல்லாட்சி. மன நோய்களைப்பற்றி சிக்மண்ட் பிராய்ட் போன்றவர்கள் ஆய்வு செய்யத் தொடங்கிய காலகட்டத்தில், உடலியக்க ரீதியாக உருவாகும் நரம்புத் தளர்ச்சியிலிருந்து, மன ரீதியாக உருவாகும் நரம்புத் தளர்ச்சியை வேறுபடுத்திக் காட்ட உபயோகப்படுத்தப்பட்ட சொல்லாட்சி.
English
A synonym now rarely used for neurosis or anxiety disorder. In the 19th century, Sigmund Freud (1856-1939) and other neurological researchers needed to distinguish between disorders that were apparently caused by physical problems and those that seemed to come from the psyche. The term "psychoneurosis" was coined to refer to nervous symptoms of a psychological origin, whereas "neurosis" was used for somatic neurological problems. See also neurosis.