psychopathic personality
உளங்கலங்கிய ஆளுமை, உளநோய் ஆளுமை, சமுதாயப் பொறுப்புணர்வற்ற ஆளுமை, பைத்தியக்காரன்
தமிழ் விளக்கம்
பார்க்க: antisocial personality disorder - சமூக விரோத ஆளுமைக் கோளாறு - இது பதினோரு வகைகளாக விளக்கப்படும் ஆளுமைக் கோளாறுகளில் ஒரு வகை. ஆளுமைக்கோளாறு என்பது ஒருவர் சார்ந்த பண்பாட்டிற்கு எதிராக ஓரளவோ அல்லது முழுமையாகவோ நடந்துகொள்ளும் முறை. பொறுப்பற்ற, மனிதர்களுடனும், அமைப்புகளுடனும் மோதல் போக்கைக் கடைபிடிக்கின்ற, மற்றவர்களுக்கு இழப்பையும், துன்பத்தையும் தருகிற மாதிரி நடந்துகொண்டு அதற்காகக் குற்ற உணர்வு கொள்ளாதிருத்தல், பிறர்மேல் குற்றம் சுமத்தும் மனோபாவம், பிறரிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதிருத்தல், ஏமாற்றங்களின் போது பொறுமை இழத்தல், மற்றும் சமூகமயமாதலில் குறைபாடு போன்றவை இந்த ஆளுமைக் கோளாறின் அடையாளம்.
English
See antisocial personality disorder.