psychopathology

உளநோய்க் கூறு இயல், உளநோயியல், உளப்பிணிக்கூறு இயல்

தமிழ் விளக்கம்

மனோபாவம், அறியும் திறன், நடத்தைப்பாங்கு போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளைப் பற்றியும், அதனுடைய காரணங்கள், அறிகுறிகள், விளைவுகள் மற்றும் எந்த மாதிரியான சமூக உளவியல் சூழ்நிலையில் அது உருவாகிறது, சமூக உளவியல் சூழ்நிலையை எப்படிப் பாதிக்கின்றது என்பதைப் பற்றி ஆராயும் அறிவியல். மேலும் எது மாதிரியான நடத்தை மற்றும் ஆளுமைக்கூறுகள் மனிதர்களையும் அவர்களோடு தொடர்பு கொண்டவர்களின் செயல்திறனையும் பாதிக்கின்றது என்று அறிவது பற்றியும் இந்த அறிவியலில் அடங்கும். சுருக்கமாக, மனிதர்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தத் தடையாக இருக்கும் மனப்பாங்கு, நடத்தை முறைகள், சமூக உறவுகள் போன்றவை ஆரோக்கியமற்ற மனதால் ஏற்படுவதாகவே இவ்வறிவியல் கருதுகிறது.

English

The study of the nature of mental, cognitive, or behavioral disorders, including causes, symptoms, effects on the subject, and the psychosocial circumstances in which the dysfunction occurs. The term is also used in referring to personality or behavioral traits that may lead to problems or underachievement for the individual or for those in contact with the individual. Virtually every mental or behavioral disorder or any social relationship problem that prevents an individual from reaching his or her potential for well-being can be considered pathological.