psychosexual development theory

உளப்பாலியல் வளர்ச்சி / அபிவிருத்திக் கோட்பாடு

தமிழ் விளக்கம்

மனித ஆளுமை எவ்வாறு படிப்படியாகக் கட்டமைக்கப்படுகிறது என்பதை உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின் கண்ணோட்டத்தில் விளக்கும் உளப்பாலியல் வளர்ச்சிக் கோட்பாடு. இக்கோட்பாட்டு களிபுற்றிருப்பதும் (pleasure) இச்சைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ளலுமே (immediate gratification) மனிதர்களின் உள்ளார்ந்த விசையாக இருப்பதாக அனுமானிக்கின்றது. இந்த உள்விசை அல்லது உட்தூண்டல் படிப்படியாக பல்வேறு நிலைகளாக வளர்ந்து பரிணமிக்கின்றது என்றும் இக்கோட்பாடு விளக்குகிறது. மனித வளர்ச்சி அல்லது மனித உள்விசை ஆறு நிலைகளில் வளர்ந்து முதிர்ச்சி பெறுவதாக இக்கோட்பாட்டின் அனுமானம். வாய்வழிப் பருவம் அல்லது சப்பும் பருவம் (oral phase - 0 -2 yrs), குதப்பருவம் அல்லது ஆசனவாய்ப்பருவம் (anal phase - ages 2 - 3), குறியின்பப் பருவம் (phallic phase or oedipal stage - ages 3-7), கண்ணயர்வு பருவம் அல்லது மொட்டவிழாப் பருவம் (latency stage - age 7 to puberty), இனப்பெருக்கப் பருவம் (genital stage - adolescence) என்று ஆறுநிலைகளில் பாலுணர்வு மிக்க உடற்பகுதி (erogenous zones) மாறுவதாக விளக்குகிறது. ஒவ்வொரு பருவத்திலும் அதற்கென்றே இருக்கும் உள்விசை நிறைவு பெற்று, மனநிறைவுடன் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டுமென்றும், அப்படி நிறைவுறாத பட்சம், அது வளர்ந்த பின் உள்ளார்ந்த முரண்பாடுகளை உருவாக்கி, உள்ளம் மற்றும் உணர்வு ரீதியான பிரச்சனைகளுக்கு வித்திடும் என்றும் இக்கோட்பாடு எடுத்துரைக்கின்றது.

English

The concepts derived from psychoanalytic theory, which describe the process by which much of the individual's personality is formed. According to this theory, the individual is motivated by innate drives and instincts toward pleasure and immediate gratification. As the individual matures, there is a transformation through various stages of development. These stages are the oral phase (up to age two), anal phase (ages two to three), and the phallic phase or oedipal stage (ages three to seven). These are followed by a latency stage (from age seven to puberty) and the genital stage (adolescence). If the individual resolves the conflicts inherent in each of these stages, the mature adult is relatively free of psychic pathology. If not, then adult intrapsychic conflict, fixation, and potentially serious emotional problems may result.