psychosis
மனநோய், பைத்தியம், கோட்டி, உளப்பிணி
தமிழ் விளக்கம்
உடலியக்க ரீதியாகவோ அல்லது மனம் சார்ந்தோ உருவாகி, மனிதர்களைச் செயல்படவிடாமல் முடக்கும் பலவகைப்பட்ட மனநோய்களின் தொகுப்பைக் குறிக்கும் சொல். மனநோயானது வெவ்வேறு நிலைகள் கொண்ட அறிகுறிகளுடன் காணப்படும். இந்த அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மனச்சிதைவும் ஏற்படும். தொடர் துக்கமின்மை, தனக்குத்தானே பேசிச் சிரித்துக் கொள்ளுதல், காதில் மாயக்குரல்கள் கேட்பதாக உணர்தல், அதிகமாக சந்தேகப்படுதல், அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்தல், சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்று தவறாக எண்ணுதல், உடல் தூய்மையின் மீது அக்கறையின்மை, எதிலும் கவனம் செலுத்த இயலாமை போன்றவை மனநோயின் அறிகுறிகளாகும்.
English
A group of serious and frequently incapacitating mental disorders that may be of organic or psychological origin. These disorders are characterized by some or all of the following symptoms: impaired thinking and reasoning ability, perceptual distortions, inappropriate emotional responses, inappropriate affect, regressive behavior, reduced impulse control, impaired reality testing, ideas of reference, hallucination, and delusion. See also schizophrenia and organic mental disorders.