psychosocial assessment

சமூக உளவியல் மதிப்பீடு

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளரின் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளின், சமூக உளவியல் நிலை பற்றிய, சமூகப்பணியாளரின் குறிப்புகளை சமூக உளவியல் மதிப்பீடு எனலாம். இது மனநோய்களைக் கண்டறிய உதவும் புள்ளிவிவரக் கையேட்டில் தொகுக்கப்பட்ட நோய்களுக்கான குறிப்புகளையும் (DSM-IV terms and codes, International Classification of Diseases (ICD), சமூகப்பணியாளர்கள் தமக்கென பயன்படுத்தும் மானுடச் சூழல் கண்ணோட்டம் / சுற்றுச் சூழலைப் பற்றிய கண்ணோட்டம் / மானுடச் சுற்றாடல் தொகுப்பில் (Person-in-Environment (PIE) System) பயன்படுத்தும் குறியீடுகளையும் தழுவி, வாடிக்கையாளரிடம் நடத்தப்பட்ட உளவியல் சோதனைகளின் முடிவுகளிலிருந்து பெறப்பட்ட புரிதல், வாடிக்கையாளரின் சட்ட அந்தஸ்து நிலை, பிரச்சனையைப் பற்றிய விளக்கம், மாற்றத்தை விரும்பும் வாடிக்கையாளரின் நேர்மறை மனோபாவம் (assets), அவருக்கான ஆதரவு சக்திகள் (resources), சிகிச்சையினால் வாடிக்கையாளருக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள், நன்மைகளைப் பெற வகுக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதே சமூக உளவியல் மதிபீடு. இந்த மதிப்பீடு ஒருமுறை தயாரிக்கப்படும் குறிப்பு போல அல்லாமல், சிகிச்சையின் பலனாக வாடிக்கையாளரிடம் ஏற்படும் மாற்றங்கள், மாற்றங்களைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து நிச்சயிக்கப்பட்ட குறிக்கோள்கள் போன்றவற்றைத் தொடர்ந்து ஆவனப்படுத்தும் முறையாகும்.

English

The social worker's summary judgment as to the problem to be solved; also referred to as the "psychosocial diagnosis." This description may include diagnostic labels (such as DSM-IV terms and codes, International Classification of Diseases [ICD] terms, descriptors from the Person-in-Environment [PIE] System), results derived from psychological tests and legal status, brief descriptive expressions of the problem configuration, a description of existing assets and resources, the prognosis or prediction of the outcome, and the plan designed to resolve the problem. Throughout the intervention process the psychosocial assessment is a "work in progress," in that it is revised continually as new information is acquired, as circumstances and goals change, and as progress toward goals is made.