psychosocial crisis
சமூக உளவியல் நெருக்கடி
தமிழ் விளக்கம்
ஒவ்வொருவரும் அவருடைய வாழ்க்கையில் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் முன்கணித்துக் கூறத்தக்க வாழ்க்கைப் பருவங்களைக் கடந்து செல்லும் போது, அந்தப் பருவம் உருவாக்கும் தனித்துவ சூழ்நிலைகளையும், சவால்களையும் ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்ளவும், கையாளவும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படியல்லாமல், முன்கணித்துக் கூறமுடியாத முக்கியத் திருப்பங்களையோ அல்லது பொறுப்புக்களையோ எதிர்கொள்ளும் போது, முன் அனுபவமின்மையால், உளவியல் நெருக்கடிக்கு உள்ளாவதைத்தான் சமூக உளவியல் நெருக்கடி என்கிறோம். இப்படி நெருக்கடி ஏற்படும் போது, அந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாதவாறு தடுமாறி, அவரின் செயல்திறன் பாதிக்கப்படலாம். அந்த நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் பெறும்போதுதான் அவர் இயல்பான உளவியல் நிலைக்கு மீண்டுவரமுடியும் என்பதை இக்கருத்து வலியுறுத்துகிறது.
English
An important turning point or role change in one's life for which the individual has had little previous coping experience. The concept is that individuals go through predictable phases or stages of development mentally and socially throughout their lives and that each stage presents unique circumstances and challenges that the person must meet to make healthy developmental progress. The crisis occurs when the individual has not yet learned how to meet the demands of the new stage and may become conflicted and less effective until the necessary social and psychological adjustments are made.