psychosocial development theory

உள சமூக அபிவிருத்திக் கோட்பாடு

தமிழ் விளக்கம்

மனித வளர்ச்சி நிலைகளைப் பல்வேறு உளவியலாளரும் பல கோணங்களில் ஆராய்ந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அறிவு வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பியாஜேயும், உளப்பகுப்பு நிலையினைக் அடிப்டையாகக் கொண்டு சிக்மண்ட் பிராய்டும், ஒழுக்க நிலையினைக் கருத்திற் கொண்டு கோல்பேர்க்கும், உள-சமூகவிருத்தி நிலையினைக் கொண்டு எரிக்சனும் விளக்கியுள்ளனர். எரிக்சனின் உள சமூகவிருத்தி நிலைகளாவன 1. அடிப்படை நம்பிக்கை Vs நம்பிக்கையின்மை (Trust vs. Mistrust - Oral-sensory, Birth- 2 years), 2. சுயசெயற்பாடு Vs வெட்கமும் சந்தேகமும் (Autonomy vs. Shame & Doubt - Muscular-Anal, 2-4 years), 3.ஆர்வம் Vs குற்ற உணர்வு (Initiative vs. Guilt - Locomotor-Genital, Preschool, 4-5 years), 4 விடாமுயற்சி Vs தாழ்வுணர்வு, (Industry vs. Inferiority - Latency, 5-12 years) 5. சுயஅடையாளம் Vs கடமைக் குழப்பம் (Identity vs. Role Confusion - Adolescence, 13-19 years), 6. நேசம் Vs தனிமையாக்கம் (Intimacy vs. Isolation - Young adulthood, 20-24, or 20-39 years), 7. ஆக்கம் Vs அசைவற்ற தன்மை (Generativity vs. Stagnation - Middle adulthood, 25-64, or 40-64 years), 8 அக உறுதிப்பாடு. Vs நம்பிக்கையிழப்பு (Ego Integrity vs. Despair - Late adulthood, 65 - death).

English

The concepts delineated by Erik Erikson (19021994) and others to describe the various stages, life tasks, and challenges that every person experiences throughout the life cycle. The phases and life tasks are trust versus mistrust, autonomy versus shame and doubt, initiative versus guilt, industry versus inferiority, identity versus role confusion, intimacy versus isolation, generativity versus stagnation, and integrity versus despair. Some other psychosocial theorists describe different ages and life tasks.