psychosocial diagnosis

பார்க்க: psychosocial assessmen

தமிழ் விளக்கம்

சமூக உளவியல் மதிப்பீடு - ஒரு வாடிக்கையாளரின் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளின், சமூக உளவியல் நிலை பற்றிய, சமூகப்பணியாளரின் குறிப்புகளை சமூக உளவியல் மதிப்பீடு எனலாம். இது மனநோய்களைக் கண்டறிய உதவும் புள்ளிவிவரக் கையேட்டில் தொகுக்கப்பட்ட நோய்களுக்கான குறிப்புகளையும் (DSM-IV terms and codes, International Classification of Diseases (ICD) , சமூகப்பணியாளர்கள் தமக்கென பயன்படுத்தும் மானுடச் சூழல் கண்ணோட்டம் / சுற்றுச் சூழலைப் பற்றிய கண்ணோட்டம் / மானுடச் சுற்றாடல் தொகுப்பில் (Person-in-Environment (PIE) System) பயன்படுத்தும் குறியீடுகளையும் தழுவி, வாடிக்கையாளரிடம் நடத்தப்பட்ட உளவியல் சோதனைகளின் முடிவுகளிலிருந்து பெறப்பட்ட புரிதல், வாடிக்கையாளரின் சட்ட அந்தஸ்து நிலை, பிரச்சனையைப் பற்றிய விளக்கம், மாற்றத்தை விரும்பும் வாடிக்கையாளரின் நேர்மறை மனோபாவம் (assets), அவருக்கான ஆதரவு சக்திகள் (resources), சிகிச்சையினால் வாடிக்கையாளருக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள், நன்மைகளைப் பெற வகுக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் போன்றவை இந்த மதிபீட்டில் அடங்கும். இந்த மதிப்பீடு ஒருமுறை தயாரிக்கப்படும் குறிப்பு போல அல்லாமல், சிகிச்சையின் பலனாக வாடிக்கையாளரிடம் ஏற்படும் மாற்றங்கள், மாற்றங்களைத் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்ட குறிக்கோள்கள் போன்றவற்றைத் தொடர்ந்து ஆவனப்படுத்தும் முறையாகும்.

English

See diagnosis and psychosocial assessment.