psychosocial therapy
சமூக உளவியல் சிகிச்சை
தமிழ் விளக்கம்
தனிநபர்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் சமுதாயம் எதிர்கொள்ளும் உணர்வு சார்ந்த அல்லது சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அகற்றி, குறிப்பிட்ட நோக்கங்களையும் நல்வாழ்வையும் அடைய உதவும் ஒரு திறத்தொழிலினரின் முயற்சிகளை சமூக உளவியல் சிகிச்சை எனலாம். சமூக உளவியல் சிகிச்சை உளப்பிணி சிகிச்சை போன்று அகமனப் / உள்மனப் போராட்டங்களில் கவனம் செலுத்தினாலும், கூடுதலாக ஒரு வாடிக்கையாளரின் சமூகஉறவுகள் சார்ந்த பிரச்சனைகள் பற்றியும், வாடிக்கையாளரின் சமூகப் பொருளாதார கலாச்சாரச் சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டு செயல்படும். மேலும் வாடிக்கையாளரின் நடத்தை, ஆளுமை, மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாடடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்கும். ஒரு நபரோ, குழுவோ அல்லது சமூகமோ ஏற்றொழுகும் விழுமியங்கள், அவர்களுடைய அபிலாட்சைகளுக்கு உட்பட்டும், அவர்களால் அணுகமுடிந்த வளங்களின் அடிப்படையிலும் நிறைவான, செயலூக்கமுள்ள வாழ்வை வாழ சமூக உளவியல் சிகிச்சை வழிவகுக்கும்.
English
A relationship that occurs between a professional and an individual, family, group, or community for the purpose of helping the client overcome specific emotional or social problems and achieve specified goals for well-being. Psychosocial therapy is a form of psychotherapy that emphasizes the interface between the client and the client's environment. The psychosocial therapist tends to focus on interpersonal and social relationship problems in addition to intrapsychic concerns. Psychosocial therapy also seeks to mobilize available resources or create needed ones and combine them with individual, group, and familial relationships to help people modify their behaviors, personalities, or situations. This is done to help attain satisfying, fulfilling functioning within the framework of one's values and goals and the available resources of society.