psychotherapy

உளசிகிச்சை

தமிழ் விளக்கம்

பல்வேறு காரணங்களால் மன அழுத்ததிற்கு உள்ளாகி, உறவு முறைகளில் சிக்கல்களை எதிர்கொண்டு, சூழ்நிலையைச் சமாளிக்க இயலாது மனநோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், தம்பதிகள், குடும்பங்கள் மற்றும் குழுக்களைப் பிரச்சனையிலிருந்து மீட்டெடுக்க, ஒரு வாடிக்கையாளருடன் சமூகப்பணியாளரும், மனநலப் பணியாளர்களும் ஏற்படுத்க்கொள்ளும் சிகிச்சை முறையிலான உறவையும், உரையாடலையும் உளசிகிச்சை என்பர். உளசிகிச்சை என்பது பல்வேறு சிகிச்சை முறைகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பொதுச்சொல். இச்சிகிச்சையில் உளப்பகுப்பாய்வு (psychoanalysis), குடும்பச் சிகிச்சை (family therapy), குழு உளச்சிகிச்சை (group psychotherapy), ஆதரவுச் சிகிச்சை (supportive treatment), முழுக்காட்சி சிகிச்சை (gestalt therapy), அனுபவச் சிகிச்சை (experiential therapy), ஊக்க உளச்சிகிச்சை / பிரதான நோய்தீர்க்கும் முறை (primal therapy), பரிமாற்றப் பகுப்பாய்வு (transactional analysis (TA), சமூகஉளவியல் சிகிச்சை (psychosocial therapy), உளநாடகச் சிகிச்சை (psychodrama) மற்றும் அறிதிறன் சிகிச்சை (cognitive therapy) என்று பல சிகிச்சை முறைகள் உள்ளடங்கும். 200 வகையான அணுகுமுறைகளைக் கொண்ட உளசிகிச்சை முறைகள் பழக்கத்திலிருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.

English

A specialized, formal interaction between a social worker or other mental health professional and a client (an individual, couple, family, or group) in which a therapeutic relationship is established to help resolve symptoms of mental disorder, psychosocial stress, relationship problems, and difficulties in coping in the social environment. Some specific types of psychotherapy are psychoanalysis, family therapy, group psychotherapy, supportive treatment, gestalt therapy, experiential therapy, primal therapy, transactional analysis (TA), psychosocial therapy, psychodrama, and cognitive therapy. Recent surveys show more than 200 identifiable and distinct types of intervention and theoretical schools in mental health.