psychotic
உளப்பிணி
தமிழ் விளக்கம்
உளப்பிணி என்பது புறவுலகை உணர்ந்தறிவது அல்லது அதை எடுத்துச் சொல்வது ஆகியவற்றில் ஏற்படும் அசாதாரண நிலையைக் குறிக்கும். இது நடத்தை, உணர்ச்சி, சிந்தித்தல் ஆகியவற்றின் இயல்புக்கு மாறான அறிகுறிகளைக் குறிக்கும். உணர்ந்தறிவதில் உண்டாகும் பிறழ்வானது, பார்வை, கேட்கும் திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களையும் பாதிக்கலாம். பொதுவாக மாயக் காட்சிகளைப் பார்ப்பது, மாய ஒலிகளைக் கேட்பது போன்ற மனப்பிரமைகள், திரிபுணர்வுப் பிணி (paranoid), பயங்கரமான மருட்சி (delusion) அல்லது ஒழுங்கின்மையான பேச்சு மற்றும் சிந்தனை இவற்றுடன் குறிப்பிடும்படியான சமூக மற்றும் பணி நிமித்தமான செயல்திறன் திரிதல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகிறது. இதன் அறிகுறிகள் பொதுவாக இளம் வயதில் உருவாகி, ஒருசதவீதம் வரையிலான மக்கள் தொகையைப் பாதிக்கிறது.
English
Characteristic of a psychosis.