puberty

பூப்புப்பருவம், பாலின முதிர்ச்சியின் தொடக்கக் காலம், பக்குவநிலை, வாலிபதசை, பூப்படைவு, ஆளாகுதல், பெண்மை அடைதல், பருவ வயதடைதல்

தமிழ் விளக்கம்

பக்குவமாதல், சாமர்த்தியமாதல், புஷ்பவதியாதல், கைதட்டுதல், மனுப்படுதல், புட்பித்தல், ருதுவாதல், பிரௌடையாதல், இருதுமதியாதல், சமைதல், நிரம்புதல், பெரியமனுஷியாதல், கன்னிப்பூ மலர்தல், மாதக்கழிவுத் தொடக்கம்.
பருவமடைதல் என்பது இனவிருத்திக்கு ஏற்ற வகையில் உடல் மாறும் ஒரு நிலையாகும். இது ஆண், பெண் இருவருக்கும் ஏற்படும் நிகழ்வுதான். இந்த நிகழ்வின் போது உடல் மற்றும் மன ரீதியான பல மாற்றங்கள் ஏற்படும். பருவமடைதலுக்கான மாற்றங்கள் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. பெண் குழந்தைகளிடம் 8-14 வயதிலும், ஆண்குழந்தைகளிடம் 10-14 வயதிலும் ஏற்படத் தொடங்கும். பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப் பையிலிருந்து பெண் பிறப்புறுப்பின் வழியாக முதல் முதலாக உதிரம் வெளியேரும் நாளில் அதாவது மாதக்கழிவு தொடங்கும் நாளே ஒரு பெண் பருவமடைந்ததற்கான அடையாளம். பெண் குழந்தைகள் பருவமடைதலுக்குத் தயாராகும் காலகட்டங்களில், அவர்களுக்கு துணையிலிங்கவியல்புகளாக (துணை பால்பண்புகள், துணைப் பாலுறுப்புகள் - secondary sex character) மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கி, பிறப்புறுப்பில் உரோமம் முளைக்கத் தொடங்கி, உடல் மெருகேறி, இடுப்பு எலும்பின் வளர்ச்சி அதிகாரித்து விரிவடையும். இந்தப் பருவத்தில் ஒரு பெண் அதே வயதுடைய ஆணை விட 30 % கூடுதல் வளர்ச்சி பெறுவாள். ஆனால் இது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஆண் பிள்ளைகளுக்கு, பெண் குழந்தைகள் போல் இல்லாமல் மெதுவாகவே மாற்றங்கள் நிகழும். சராசரியாக 13 வயதில் சில மாற்றங்கள் ஏற்படும். பெண் குழந்தையை விட உயரம் கூடி, தோள்கள் அகன்று, தொண்டைக்கு அருகிலுள்ள சுவாசக்குழாய் விசாலமாகி குரல் கரகரப்பாக மாறி. மூக்கு பெரிதாகி, முகத்தில் உரோமம், மீசை வளர ஆரம்பிக்கும். உடல் மெலியும். கால்களில் தசைகள் வலுவாகும்.

English

The period of biological development in which the reproductive capacity of the male or female is established.