public health
பொது சுகாதாரம்
தமிழ் விளக்கம்
நோய்களைத் தடுத்து, வாழ்நாளை நீட்டித்து, நலமுடன் வாழ வழி செய்யும் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் அதை அமுல்படுத்த நிர்வாக அமைப்பை ஏற்படுத்தல் என்பது பொதுசுகாதாரப் பணியாகும். சுற்றுச் சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதிலிருந்து தொடங்கி, ஆரம்ப நிலையிலே நோய்களைக் கண்டறிந்து, அதைத் தடுத்து, தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு உடல்நலம் பேணும் (personal hygiene) கல்வியளித்து, சிகிச்சை பெற மருத்துவமனைகள் மற்றும் நலம்பேணகங்களை ஏற்படுத்தி, பொது சுகாதார விதிகளை உருவாக்கி, அதைப் பின்பற்ற மக்களுக்கு அறிவுறித்தி குடிமக்களின் ஆரோக்கியத்தை பேணும் முயற்சிகள் பொது சுகாதாரம் எனப்படும். பெரும்பாலும் பொதுசுகாதார மேம்பாட்டு முயற்சிகள் அந்தந்த நாட்டு அரசுகளாலும், அரசு சார்ந்த நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்படுகின்றன. அரசு முயற்சிகளைத் தவிர நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களையும் பொது சுகாதாரப் பண்பாடு எனலாம். சுகாதாரம் குறித்த வரையறைகள் வெவ்வேறு பண்பாடு, பாலினம் மற்றும் முதுமைக் குழுக்களில் மாறுபடுகின்றது. சில வழமையான சுகாதாரச் செய்கைகள் நல்ல பழக்கங்களாகவும் சுகாதாரம் பேணாமை வெறுப்பை ஊட்டுவதாகவும், மரியாதைக் குறைவாகவும், சிலநேரங்களில் அச்சுறுத்தலாகவும் சமூகத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
English
A system of programs, policies, and health care personnel whose goal is to prevent disease, prolong life, and promote better health. Efforts to achieve these goals are made through such public health measures as improving sanitation, controlling communicable diseases, educating people about personal hygiene, organizing medical and nursing services for early diagnosis and prevention of disease, and developing health care facilities and access to these facilities. Public health programs are administered by many federal, state, and local agencies.