public-interest research group (PIRG)
பொது ஆர்வ ஆய்வுக்குழுக்கள்
தமிழ் விளக்கம்
ரால்ப் நாடர் மற்றும் டொனால்ட் ராஸ் (Ralph Nader & Donald Ross) என்பவர்கள் அமெரிக்க மாணவர்கள் பொதுவிவகாரங்களில் ஆர்வம் கொள்ள எழுதிய மாற்றத்திற்கான செயல்பாடு (Action for a Change) என்ற புத்தகமே பொது ஆர்வ ஆய்வுக்குழுக்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாகத் தோன்றவும் பிற நாடுகளில் உருவாகவும் காரணமானது. மக்களைப் பாதிக்கும் சமூகப் பிரச்சனைகளை இனங்கண்டு, அதன் காரணங்களை ஆய்வுக்குட்படுத்தி அந்த ஆய்வின் முடிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கத் தூண்டுவது இந்தக் குழுக்களின் முக்கிய நோக்கம். இதில் தொண்டு நிறுவனங்கள், பொதுநல ஆர்வலர்கள், புலனாய்வுப் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பலரும் இணைந்து செயல்படுவார். இந்தக் குழுக்கள் தேர்தல் சீர்திருத்தங்கள், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை இனங்கண்டு தெரிவித்தல், வணிக நிறுவனங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவது, நுகர்வோர்கள் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து வசதிகளை சீர்படுத்துவது, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை தரமுயர்த்தப் பாடுபடுவது, வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் சுரண்டல்களை அம்பலப்படுத்துவது போன்ற பல தளங்களில் உலகம் முழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
English
Organizations funded by private and philanthropic contributions to identify the existence of particular social problems, determine their causes, evaluate proposed solutions, and present findings to the public and those institutions that can address the problems.